ஒடிசா மாநிலம் அங்குல் பகுதியில் உள்ள பிரபல ‘போயனிகா’ (Boyanika) ஜவுளிக்கடைக்கு சொகுசான இன்னோவா காரில் வந்து இறங்கிய அந்த 6 பெண்களைப் பார்த்தால், பெரும் பணக்கார வீட்டுப் பெண்கள் போலவே தெரிந்தனர். மிக விலையுயர்ந்த சேலைகளைத் தேடி வந்த வாடிக்கையாளர்கள் போல நடித்த அவர்கள், ஊழியர்களின் கவனத்தைச் சிதறடிக்க பக்கா பிளான் போட்டனர். ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகள் கேட்டு ஊழியர்களைக் குழப்பிக் கொண்டிருந்தபோதே, மிக லாவகமாக 25-க்கும் மேற்பட்ட பட்டுச் சேலைகளைத் திருடி மறைத்துக்கொண்டனர்.
யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒருவரை ஒருவர் மறைத்து ‘ஹ்யூமன் ஷீல்டு’ (Human Shield) போல நின்று கொண்டு, சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சேலைகளைச் சுருட்டிக்கொண்டு அந்த சொகுசு காரிலேயே எஸ்கேப் ஆகினர். கடையை மூடும்போது ஸ்டாக் சரிபார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், அந்தப் பெண்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், ‘ப்ரோ லெவல்’ வேகத்தோடும் இந்தத் திருட்டை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பது அம்பலமானது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, கடை உரிமையாளர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.