தவெக தலைவர் விஜய்க்கு என்னாச்சு? சைக்கிள் பிரசாரத்தில் பதறவைத்த தொண்டர்.. தீயாய் பரவும் வீடியோ!
TV9 Tamil News April 15, 2026 04:48 PM

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, தவெக தலைவர் விஜய் சாலையில் சைக்கிளில் பயணம் செய்து தங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், அவர் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அதில் கன்னியாகுமரியில் பேரணியில் விஜய் கலந்து கொண்ட ஒரு காணொளியை தவெக கட்சி தலைமை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், தவெக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வரும்போது ரசிகர் ஒருவர் அவர் மீது பூக்களை தூவ முயற்சிக்கிறார். இதை பார்த்த விஜய், தனது சைக்கிளை ஒரு வெடிகுண்டு போல தூக்கி எறிந்து விட்டு பின்னால் ஓடுகிறார்.

ரசிகர் வீசிய பூவால் தெறித்து ஓடிய விஜய்

மேலும், அந்த வீடியோவில் விஜய் சைக்கிள் ஓட்டி வந்தபோது அவரது பாதுகாப்பு படையினர் அவரை பார்த்து கை கையசைத்துக் கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு ரசிகர் விஜய் மீது எதையோ வீசிவிட்டு ஓடிய போது விஜய் பதற்றம் அடைவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை உறுதி செய்வதற்காக விஜய் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தனது பிரச்சார வாகனத்தை நோக்கி ஓடுகிறார். ரசிகர் வீசியது பூ என்றாலும், அதனை வேறு ஏதோ மர்ம பொருள் என்று எண்ணி விஜய் பின்வாங்கி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!

சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ

விஜய் தனது பிரச்சார வாகனத்தில் ஏறிய போது அவரது பாதுகாப்பு படையினர் வேனை சுற்றி தங்களது வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் விஜயின் இந்த நடவடிக்கையானது நியாயமானது என்று கருதுகின்றனர். இதே போல, மற்றொரு நபர் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லை என்று தெரிவித்துள்ளார்.

A video taken down by @TVKVijayHQ is now going viral everywhere.

During his cycle campaign, Vijay suddenly threw his cycle and ran back as if it was a bomb when a fan tried to shower flowers on him. pic.twitter.com/imuDSz245j

— Telangana Maata (@TelanganaMaata)

கரூர் சம்பவம் போல நிகழ்ந்து விடக்கூடாது

மற்றொரு நபர் தன்னைத்தானே மாஸ்டர் என்று கூறிக் கொள்ளும் விஜய் மாலையை பிளாஸ்டர் என்று தவறாக நினைத்து பாஸ்டர் போன்று திரும்பி ஓடியதாக கேலியாக கருத்து பதிவிட்டுள்ளார். மேலும், பலர் விஜய் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோல, மற்றொரு நபர் கரூர் சம்பவம் போல நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அஞ்சி அவர் பின் வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: “மாநில உரிமைகளுக்கு ஆபத்து; தமிழகத்திற்குத் தண்டனையா?”.. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு விஜய் கடும் கண்டனம்!!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.