கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி, தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ள ரஷ்யா-உக்ரைன் போர், இப்போது மனிதர்களால் மட்டும் நடத்தப்படவில்லை, மாறாக, ரஷ்ய கடற்படைக்கு எதிராக உக்ரைன் ஆளில்லா தரை வாகனங்கள் அல்லது ரோபோக்களை பயன்படுத்துவதால், இந்தப் போர் ஒரு உயர் தொழில்நுட்ப மோதலாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உலக வரலாற்றில் முதன் முறையாக, ரோபோக்களை தரைவழிப் போருக்கு அனுப்பி, ரஷ்ய வீரர்களை சரணடைய வைத்துள்ள உக்ரைன்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் 3 நீண்ட பதிவுகளை போட்டுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதில், முதன்முறையாக, உக்ரைன் ஒரு ரஷ்ய நிலையை ஆளில்லா தளங்களை கொண்டு - அதாவது தரை அமைப்புகள் மற்றும் ரோபோக்களை கொண்டு - "முழுக்க முழுக்க" கைப்பற்றியது. "ஆக்கிரமிப்பாளர்கள் சரணடைந்தனர், மேலும் இந்த நடவடிக்கை காலாட்படை இல்லாமலும், எங்கள் தரப்பில் எந்த இழப்புகளும் இன்றி மேற்கொள்ளப்பட்டது," என்று கூறியுள்ளார்.
மேலும், தொழில்நுட்பம் எவ்வாறு மனித உயிர்களை காப்பாற்றுகிறது என்பதற்கு உதாரணமாக, கடந்த 3 மாதங்களில் தரைவழி வாகனங்கள் 22,000-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
The capabilities of Ukraine’s defense industry mean millions of FPV drones per year, our deep strikes, our interceptors, and millions of shells. Ukraine has its own long-range missile weapons. Not just in development, but a real force already at work. Flamingo and Ruta, Peklo and… pic.twitter.com/6LCeIpIuuZ
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 13, 2026
அதோடு, உக்ரைனின் பாதுகாப்புத் துறையின் திறன்களுக்கு, ஆண்டுக்கு மில்லியன் கணக்கான நேரடிப் பார்வை (FPV) ட்ரோன்கள், ஆழ்துளை தாக்குதல்கள், இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் மில்லியன் கணக்கான குண்டுகளே காரணம் என்று ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
மேலும், உக்ரைனின் ஆளில்லா விமானங்கள், எல்லையிலிருந்து 1,750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் நீண்ட தூர வரம்பைக் கொண்டுள்ளன என்றும், இந்த வரம்பு விரிவுபடுத்தப்படும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
The future is already on the front line – and Ukraine is building it. These are our ground robotic systems. For the first time in the history of this war, an enemy position was taken exclusively by unmanned platforms – ground systems and drones. The occupiers surrendered, and the… pic.twitter.com/qLQKfxPdiB
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 13, 2026
இத்துடன், தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார் ஜெலன்ஸ்கி. அதில், கருங்கடலில் ஒரு பணியை மேற்கொண்ட அனுபவம் உக்ரைனுக்கு உள்ளது என்றும், அது, எதிரி கடற்படை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைக் கண்ணிவெடிகளை எதிர்த்து போராடியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
We also have experience in guaranteeing maritime security – objectively, the most current in the world. No one else has carried out missions like Ukrainians have in the Black Sea. When people talk about security in the Strait of Hormuz, it is often a theoretical discussion. Those… pic.twitter.com/bYYgtFOJ4C
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 13, 2026
யாரும் எதிர்பாராத வகையில் இத்தனை ஆண்டுகள் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடிவரும் நிலையில், தற்போது ரோபோக்களை போர்க்களத்திற்கு அனுப்பி வெற்றி கண்டு, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது உக்ரைன்.