Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், சேலம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான எடப்பாடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகர்வுகள் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக-வின் அதிகாரப்பூர்வ வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சூழலில், நடிகர் விஜய் தற்போது ஒரு சுயேச்சை வேட்பாளருக்குத் தனது முழு ஆதரவை அறிவித்துள்ளார்.
எடப்பாடியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்புமனு பரிசீலனையின் போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான முக்கிய காரணங்களாக, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்புமனுவை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது விதி. ஆனால், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். வேண்டுமென்றே கவனக்குறைவாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதனால், முக்கியத்துவம் வாய்ந்த எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை உருவானது. இதனை “சின்னத்தை முடக்கச் செய்யப்பட்ட சதி” என அக்கட்சித் தலைமை கருதுகிறது.
விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு:என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய… pic.twitter.com/Y9PrumJfmd
— TVK Vijay (@TVKVijayHQ)
தனது கட்சியின் சின்னம் முடக்கப்பட்டாலும், எடப்பாடி தொகுதி மக்களைக் கைவிடப் போவதில்லை என்ற முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், நமது ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் நிர்வாகியாகப் பணியாற்றிய நமது சகோதரர். எனவே, எடப்பாடி தொகுதி தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் இவரை நமது வேட்பாளராகக் கருதி செயல்பட வேண்டும்.\” என்று அறிவித்துள்ளார்.