தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு, 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முன்னதாக, கூட்டணிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராகுல்காந்தி தமிழகத்தின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார் என செய்திகள் வெளியாகின.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் 06 தேதி புதுச்சேரியில், முதல்வர் ஸ்டாலினும், ராகுல்காந்தியும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபட்டனர்.அப்போது இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், ராகுல்காந்திக்கும் திமுகவுக்குமான இடையில் முரண்பாடு தொடர்ந்து வருகிறது என கூறப்பட்டு வந்தது. அண்ணனால், வரும் சனிக்கிழமை 18ஆம் தேதி, ராகுல்காந்தி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளாவில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் பரப்புரையில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
அதன்படி, வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) காலை பொன்னேரி மற்றும் சோளிங்கரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், சனிக்கிழமை மாலை துறையூரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் களமிறக்கவுள்ளார்.
ராகுல் காந்தி தமிழ்நாடு பரப்புரை ஒருங்கிணைப்பு பணிகளில் செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.