தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்து மிகக் கடுமையாக விமர்சித்தார்.
“திமுக-வும் அதிமுக-வும் வெவ்வேறு கிடையாது, இரண்டு பேரும் ஒன்றுதான்” என்று சீறிய அவர், பழைய வாக்குறுதிகளையே புதிய பாணியில் அவர்கள் வழங்கி வருவதாகச் சாடினார். “ஏற்கனவே கொடுத்த தேர்தல் அறிக்கையைத்தான், தற்போது பெயரையும் கலரையும் மாற்றி மீண்டும் மக்களிடம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்” என்று அவர் விமர்சித்தது அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கரகோஷத்தைப் பெற்றது.
திராவிடக் கட்சிகள் மாறி மாறிப் பழைய திட்டங்களையே புதுப்பித்து வெளியிடுவதாகவும், மக்களுக்கான உண்மையான மாற்றம் தவெக-வால் மட்டுமே சாத்தியம் என்றும் விஜய் தனது பேச்சின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
“>