தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் தொகுதி மக்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கான தனது திட்டத்தை மிக எளிமையாக விளக்கினார். “என் தொகுதிக்கு மாதம் ஒருமுறை நான் நேரில் வருவேன்; அதேபோல் நீங்களும் என்னைச் சந்திக்கலாம்” என்று குறிப்பிட்ட அவர், ஒரு தலைவரைச் சந்திப்பது என்பது கடினமான காரியம் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் பேசினார்.
”என்னைச் சந்திப்பது ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம், மிகவும் எளிதாக (Easy) என்னைச் சந்திக்கலாம்” என அவர் கொடுத்த உறுதிமொழி தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களைத் தேடிச் செல்லும் அரசியலையும், மக்கள் தன்னை எளிதில் அணுகும் முறையையும் தான் கடைபிடிக்கப் போவதாக விஜய் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது 2026 தேர்தல் களத்தில் மக்களுக்கும் தலைவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.