நடிகை தமன்னாவுக்கும் பவர் சோப் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வந்த 'விளம்பர போர்' தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2008-ல் ஒரு வருட ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்திற்காக தமன்னா நடித்த நிலையில், ஒப்பந்தம் முடிந்த பிறகும் 2010 மற்றும் 2011-ல் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது படங்களைப் பயன்படுத்த தடை விதிப்பதோடு, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதே தமன்னாவின் மெயின் கோரிக்கையாக இருந்தது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, தமன்னா தாக்கல் செய்த ஆதாரங்கள் வலுவாக இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார். இதை எதிர்த்து விடாப்பிடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமன்னா மேல்முறையீடு செய்த நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானது தான் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் இந்த முடிவால் நடிகை தமன்னாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அதே சமயம் பவர் சோப் நிறுவனம் நிம்மதி அடைந்துள்ளது. சினிமா நட்சத்திரங்கள் விளம்பர ஒப்பந்தங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு முக்கிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த விவகாரத்தில், தற்போது தமன்னாவின் மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை