82 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த நடிகர்... சோகத்தில் முடிந்த பிரிவு!
Dinamaalai April 16, 2026 08:48 PM

உலகப் புகழ்பெற்ற 'காட்பாதர்' பட நாயகன் அல் பாசினோ, தனது 82 வயதில் 51 வயது குறைவான நூர் அல்ஃபல்லா என்ற பெண்ணை மணந்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். தாத்தா வயதில் நடிகர் இருந்தாலும், காதல் வயப்பட்ட இந்த ஜோடி கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது. இவர்களுக்கு இப்போது 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், திடீரென தங்கள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஜோடி முடிவெடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வயது வித்தியாசம் என்பது காதலுக்குத் தடையல்ல என்று வாழ்ந்து காட்டிய இந்த ஜோடி, இப்போது "நாங்கள் இனி வெறும் நண்பர்களாக மட்டுமே தொடர்வோம்" எனப் பிரிவை அறிவித்துள்ளது. 85 வயதை எட்டும் நிலையில் இருக்கும் அல் பாசினோ, தனது இளம் மனைவியைப் பிரிவது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான வதந்திகள் சிறகடிக்கின்றன. ஆரம்பத்தில் இவர்களது காதலைக் கொண்டாடிய ரசிகர்கள், இப்போது இந்தத் திடீர் முடிவைக் கேட்டு "இது என்னப்பா புதுக் குழப்பம்?" என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் ஹாலிவுட் தாண்டி உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, குறிப்பாகக் குழந்தையின் எதிர்காலம் மற்றும் சொத்து விவகாரங்கள் குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. "காதலுக்குக் கண் இல்லை என்பது சரிதான், ஆனால் இவ்வளவு சீக்கிரம் முறிவு தானா?" என நெட்டிசன்கள் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, 'காட்பாதர்' பாணியில் அதிரடியாகத் தொடங்கிய இந்தக் காதல் கதை, இப்போது ஒரு சோகமான கிளைமாக்ஸை எட்டியுள்ளது மட்டும் நிஜம்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.