தமிழ் சினிமாவில் ஜன நாயகன் படத்தின் சர்சைக்கு முன்பு அதிக அளவில் பேசப்பட்டது அரசன் படத்தின் சர்ச்சை தான். நடிகர் சிலம்பரசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது உடல் எடையை குறைத்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. அதன்படி அரசன் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகின்றது. இதில் நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றத்தில் மூன்று காலங்களில் நடித்து வருவது போல காட்சியமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான படப்பிடிப்புகள் பிசியாக நடைப்பெற்று வந்தது. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தின் கதாப்பாத்திரங்கள் இந்த அரசன் படத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் கதாப்பாத்திரம் உள்ளதா இல்லையா என்பது படம் வெளியாகும் போதுதான் தெரியவரும். ஆனால் மற்ற கதாப்பாத்திரங்களின் நீட்சி இந்த அரசன் படத்தில் உள்ளதை இயக்குநர் முன்னதாகவே தெரிவித்து இருந்தார். இப்படி இருந்த நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் தயாரிப்பு நிறுவனம் முன்பு நடந்த விசயத்தை மீண்டும் தோண்டி நடிகர் சிம்புவின் அரசன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார். இந்தப் பிரச்சனை ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்து உள்ளது.
அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர்:‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது; இதில் ராஜன் (அமீர்) மற்றும் செந்தில் (கிஷோர்) ஆகியோரின் இளமைக்காலக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் மிகவும் விறுவிறுப்பான அம்சம் என்னவென்றால், இந்தக் கதாபாத்திரங்கள் STR-உடன் எவ்வாறு இணைகின்றன என்பதுதான். இதற்கிடையில், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் கருப்புப் பட்டைகளை அணிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… தல அஜித்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் பில்லா படம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:#Arasan 👑 shooting is currently underway, with Raajan (#Ameer) and Senthil (#Kishore)’s younger flashback portions being filmed.
The most exciting aspect of the film will be how these characters connect with #STR 😎🔥
Meanwhile, the team has worn black badges in protest… pic.twitter.com/PKFHFjGA3T
— Movies Singapore (@MoviesSingapore)
Also Read… இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்