வரும் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அட்சய திருதியை.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், பணம் சேரும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதனால், அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது இந்தியர்கள் வாங்குவார்கள்... அல்லது வாங்க முயற்சிப்பார்கள்.
ஆனால், இப்போது... இன்றைய தங்கம் விலையில் அந்த ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
தங்கம் 'இப்போ சந்தையில் எதற்கு நல்ல வாய்ப்பு?'- தங்கம், வெள்ளிக்கே அடுத்த இடம்; முதல் 2 இடங்கள் எவற்றுக்கு?
ஆம்... இன்றைய விலை நிலவரத்தின் படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,210. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,13,680.
ஆக, கடந்த 10 ஆண்டுகளில் அட்சய திருதியை அன்று தங்கம் விலை என்னவாக இருந்தது... இப்போது எவ்வளவு சதவிகிதம் விலை உயர்ந்திருக்கிறது என்று ஒரு பார்வை பார்க்கலாம்.
2016-ம் ஆண்டு அட்சய திருதியில் இருந்து இப்போது வரை சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பார்ப்போம்.
தேதி - ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) - ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) - ஒரு கிராம் வெள்ளி விலை
மே 9, 2016 - ரூ.2,843 - ரூ.22,744 - ரூ.44.50
ஏப்ரல் 28, 2017 - ரூ.2,778 - ரூ.22,224 - ரூ.43.20
ஏப்ரல் 18, 2018 - ரூ.2,992 - ரூ.23,936 - ரூ.42.50
மே 7, 2019 - ரூ.3,022 - ரூ.24,176 - ரூ.40.20
ஏப்ரல் 26, 2020 - ரூ.4,509 - ரூ.36,072 - ரூ.46.10
தங்கம், வெள்ளி கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4
மே 14, 2021 - ரூ.4,507 - ரூ.36,056 - ரூ.75.50
மே 3, 2022 - ரூ.4,796 - ரூ.38,368 - ரூ.67.20
ஏப்ரல் 22, 2023 - ரூ.5,605 - ரூ.44,840 - ரூ.80.40
மே 10, 2024 - ரூ.6,770 - ரூ.54,160 - ரூ.91.20
ஏப்ரல் 30, 2025 - ரூ.8,980 - ரூ.71,840 - ரூ.111
விலையைப் பார்த்துவிட்டோம். இப்போது Year - on Year வித்தியாசத்தை பார்ப்போம். அதாவது, ஒரு ஆண்டு அட்சய திருதியின் விலையை முன்னர் ஆண்டு அட்சய திருதியின் விலையோடு ஒப்பிட்டு பார்ப்போம்.2016-ம் ஆண்டை விட, 2017-ம் ஆண்டில்
தங்கம் விலை: 2.29 சதவிகிதம் சரிவு
வெள்ளி விலை: 2.92 சதவிகிதம் சரிவு
2017-ம் ஆண்டை விட, 2018-ம் ஆண்டில்
தங்கம் விலை: 7.70 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 1.62 சதவிகிதம் சரிவு
2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில்
தங்கம் விலை: 1 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 5.41 சதவிகிதம் சரிவு
தங்கம், வெள்ளி 15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்
2019-ம் ஆண்டை விட, 2020-ம் ஆண்டில்
தங்கம் விலை: 49.21 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 14.68 சதவிகிதம் ஏற்றம்
2020-ம் ஆண்டை விட, 2021-ம் ஆண்டில்
தங்கம் விலை: 0.04 சதவிகிதம் சரிவு
வெள்ளி விலை: 63.77 சதவிகிதம் ஏற்றம்
2021-ம் ஆண்டை விட, 2022-ம் ஆண்டில்
தங்கம் விலை: 6.41 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 10.99 சதவிகிதம் சரிவு
2022-ம் ஆண்டை விட, 2023-ம் ஆண்டில்
தங்கம் விலை: 16.87 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 19.64 சதவிகிதம் ஏற்றம்
2023-ம் ஆண்டை விட, 2024-ம் ஆண்டில்
தங்கம் விலை: 20.79 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 13.43 சதவிகிதம் ஏற்றம்
2024-ம் ஆண்டை விட, 2025-ம் ஆண்டில்
தங்கம் விலை: 32.64 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 21.71 சதவிகிதம் ஏற்றம்
தங்கம், வெள்ளி
2025-ம் ஆண்டை விட, இன்றைய தங்கம், வெள்ளி கணக்கில்
தங்கம் விலை: 58.24 சதவிகிதம் ஏற்றம்
வெள்ளி விலை: 147.75 சதவிகிதம் ஏற்றம்
இந்த 10 ஆண்டுகளில் இது தங்கம் மற்றும் வெள்ளியின் வளர்ச்சி. இந்தக் கணக்கைப் பார்த்தல் 2025-ம் ஆண்டில் தான் தங்கம் மற்றும் வெள்ளி விலை அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
2016-ம் ஆண்டு, ரூ.1 லட்சத்திற்கு 35.17 கிராம் தங்கமும், 4.40 பவுன் தங்கமும் வாங்கியிருக்கலாம்.
ஆனால், இப்போது நிலை என்ன என்பது நமக்கே தெரியும்!
Malacca Strait பக்கம் திரும்பும் அமெரிக்கா: சீனாவிற்கு 'பெரிய செக்?' இந்தியாவும் கைக்கோக்குமா?