தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 06 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 02 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அதன்பின்னர், பெரம்பூரில் உள்ள தவெக கட்சி தேர்தல் பணிமனைக்குச் சென்ற விஜய், அங்கிருந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு வீட்டுக்கு வெளியே விசில் கோலம் போட்டு வாக்கு சேகரித்தார். எந்த அறிவிப்பும் இல்லாமல் விஜய் சென்றதால் அங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. அத்துடன், கூட்டத்தை தவிர்க்கும் வகையில், கோலம்போட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.