21 வயதான இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் 04 பாடல்களின் மூலம் 800 மில்லியன் யூடியூப் வியூஸ்களை அள்ளி சாதனை படைத்துள்ளார்.
பாடகர்கள் திப்பு - ஹரியின் மகன் தான் சாய் அபயங்கர். சென்னையில் பிறந்து வளர்ந்தவருக்கு, தாய் - தந்தை இருவரும் இசைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே அவருக்கும் இசையின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பருவத்திலிருந்தே இசையைக் கற்றுக்கொண்டுள்ளார்.
சாய் அபயங்கரின் தங்கை ஸ்மிருதியும் பாடகராவார். சாய் அபயங்கரை பாடகர்களான ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஏ.டி. ராமமூர்த்தி மற்றும் ஹென்றி குருவில்லா ஆகியோரிடம் குரலிசை பயின்றுள்ளார். இதன் மூலம் தனது 13 வயதில் சாய் அபயங்கர் இசையமைக்க தொடங்கியுள்ளார்.
ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையில் கடந்த 2023-ஆம் ஆண்டு உருவான 'வலம் வரவேண்டும்' பாடலை பாடியிருந்தார். இது தான் அவருடைய முதல் பாடல். 2024-ஆம் ஆண்டு தனது முதல் பாடலான 'கட்சி சேரா' பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் யூடியூப்பில் வைரலானது. குறிப்பாக சம்யுக்தா விஸ்வநாதனின் நடனமும், பாடலும் பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த 'கட்சி சேரா' யூடியூப்பில் 265 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடுத்த பாடலான 'ஆச கூட' என்ற அந்த ஆல்பம் பாடலை வெளியிட்டார். இந்த பாடலும் யூடியூப்பில் 385 மில்லியன் வியூஸ்களை பெற்றது.
இந்த பாடலில் நடிகை ப்ரீத்தி முகுந்தனின் நடனம் கவனம் ஈர்த்ததோடு, இந்தப் பாடல் இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு, ஏனைய சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
அடுத்து 2025-ஆம் ஆண்டு மீனாட்சி சௌத்ரி நடனத்தில் 'சித்திர புத்திரி' பாடலை இசையமைத்து, பாடியிருந்தார். இந்தப் பாடல் 50 மில்லியன் வியூஸ்களை அள்ளியது.
இதனைத்தொடர்ந்து, அண்மையில் 'பவழ மல்லி' பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகை கயாடு லோஹரின் சிறப்பான நடனத்தில் யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. ஆக மொத்தம் 04 பாடல்களில் 800 மில்லியன் யூடியூப் வியூஸ்களை கடந்துள்ளார் சாய் அபயங்கர்.
இதனிடையே கடந்த ஆண்டு தொடக்கத்தில் சான்வே மேக்னா நடிப்பில் 'விழி வீக்குற' பாடலை வெளியிட்டிருந்தார் அந்தப் பாடல் 30 மில்லியன் வியூஸ்களை பெற்றது.
அதேபோன்று சாய் அபயங்கர் இசையில் 'டியூட்' திரைப்படம் வெளியானது. அடுத்து 'கருப்பு' திரைப்படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அடுத்து தனுஷின் 55-வது படத்துக்கும் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.