ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
கடினமான இலக்கை விரட்டிய லக்னோ அணியால் 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியின் வீரர் ஷஷாங்க் சிங் செய்த ‘பீல்டிங்’ சொதப்பல்கள் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
“>
ஒரே போட்டியில் பூரன், மார்க்ரம் மற்றும் முகுல் சவுத்ரி என மூன்று முக்கிய வீரர்களின் கேட்சுகளைத் தவறவிட்டு ஷஷாங்க் சிங் அதிர்ச்சி அளித்தார். போட்டி முடிந்த பிறகு, தனது தவறுகளால் வருத்தமடைந்த ஷஷாங்க் சிங் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அங்கு வந்து தனது தொப்பியால் ஷஷாங்கின் முகத்தை மறைத்து அவருக்கு ஆறுதல் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“>