தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்!
Dinamaalai April 21, 2026 03:48 PM

தமிழக சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவானது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலன்று தொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும். நிறுவனங்கள் இந்த விதிகளை முறையாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை தனியார் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் இந்த உத்தரவை மீறி தொழிலாளர்களை பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தினால் உடனடியாக புகார் அளிக்கலாம். இதற்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பிரத்யேக மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.