மிருணாள் தாக்கூரை வைத்து படம் இயக்க உள்ளாரா தனுஷ்? வைரலாகும் தகவல்
TV9 Tamil News April 22, 2026 12:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் கோடை விடுமுறையை மையமாக வைத்து வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தனுஷின் 55-வது படம் மற்றும் 56, 57 ஆகியப் படங்கள் அடுத்தடுத்து உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களில் நடிப்பது தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருவது போல அவர் இயக்குநராக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேர்பைப் பெறுவது போல அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் நடிகை மிருணாள் தாக்கூர்:

இந்த நிலையில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் இதுவரை பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகியப் படங்கள் வெளியாகி உள்ளது. அதில் மூன்று படங்களில் அவரே நாயகனாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் 1960 களில் நிகழும் பீரியட் ட்ராமாவாக இந்தப் படம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!

இணையத்தில் வெளியாகும் எக்ஸ் தள பதிவு:

#Dhanush‘s next Directorial Film will have #MrunalThakur playing the central character, a female centric film ♥️✨
A period film set in 1960’s 🔥
Film expected to kickstart soon🎬 pic.twitter.com/eSkeq2xs7p

— AmuthaBharathi (@CinemaWithAB)

Also Read… Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.