“கிசு கிசுக்களுக்கு 'எண்ட் கார்டு'..!”… மீண்டும் சங்கீதாவுடன் இணைந்த விஜய்… ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!!
SeithiSolai Tamil April 22, 2026 12:48 AM

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும், தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த சமரச முடிவை இருவரும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அது தொடர்பான விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்ததாகவும் முன்னதாகத் தகவல்கள் பரவின.

மேலும், விஜய்யுடன் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளைப் பிணைத்து பல்வேறு கிசு கிசுக்கள் எழுந்தன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழத் தொடங்கியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சுமுகமான முடிவு விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் ஒரு பாசிட்டிவ் இமேஜை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.