தமிழகத்தில் தலைநகரான சென்னையில் பல ஊர்களை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால் சென்னையில் வசிப்பவர்களில் 40 சதவீதம் மட்டுமே பூர்வீக சென்னையை சேர்ந்தவர்கள். மற்றவர்களெல்லாம் வெளி ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் சேர்ந்த பல பகுதிகளிலிருந்து பலரும் சென்று அங்கு பணிபுரிகிறார்கள்.. அங்கே தங்கியிருக்கிறார்கள்.. அவர்களெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை போன்ற நாட்களில் சொந்த ஊருக்கு செல்வார்கள்..
அப்போதெல்லாம் அவர்கள் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து அல்லது ரயில் ஆகியவற்றில் பயணிக்கிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கின்றன. இது காலம் காலமாக நடந்து வருகிறது.
பலமுறை தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.. அதேபோல் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுப்பதில்லை.
இந்நிலையில்தான், நாளை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு வருவதற்கு ஆம்னி பேருந்தை பயன்படுத்துவார்கள். இதை பயன்படுத்தி வழக்கம்போல்இந்த முறையும் ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது..
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்திருக்கிறது. மேலும் சுங்கச்சாவடிகள், ஆம்னி பேருந்து நிலையங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது..