“இலக்கை எட்ட சில மீட்டர்களே தூரம்.. ஆனால்!”.. மாரத்தான் பந்தயத்தில் மயங்கி விழுந்த வீரர்… சக வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!!!!
SeithiSolai Tamil April 23, 2026 12:48 AM

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் மாரத்தான் பந்தயத்தில், மனிதாபிமானத்தைப் போற்றும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பந்தயத்தின் இலக்கை எட்ட இன்னும் சில மீட்டர்களே இருந்த நிலையில், அஜய் ஹரிதாஸ் என்ற வீரர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சக வீரர்களான ஆரோன் பெக்ஸ் மற்றும் ராப்சன் ஒலிவேரா ஆகியோர், தங்களின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல், மயங்கிய வீரரைத் தங்களது தோளில் சுமந்து சென்று பந்தயத்தை முடிக்க உதவினர்.

விளையாட்டைத் தாண்டி மனிதநேயமே முக்கியம் என்பதை உணர்த்தும் இந்த உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.