ஜன நாயகன் பட கசிவு… வேதனையுடன் பேசிய நடிகை மமிதா பைஜூ
TV9 Tamil News April 23, 2026 01:48 AM

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் தளபதி விஜய் தமிழ் நாட்டில் அரசியல் கட்சியை ஆரம்பித்து இந்த 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் காரணாமாக தீவிர அரசியலில் தான் களமிறங்க உள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தளபதி விஜயின் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் தான் அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இறுதிப் படம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

இந்த ஜன நாயகன் படத்தினை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தில் விஜயின் மகளாக நடித்து இருப்பதாக ட்ரெய்லரின் காட்சிகளைப் பார்க்கும் போது தெரிந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஜனவரி மாதமே வெளியாவதாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தப் படம் சமீபத்தில் முழுவதுமாக இணையத்தில் கசிந்தது ரசிகர்களிடையேயும் படக்குழுவினர் இடையே மட்டும் இன்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் பட கசிவு வேதனையுடன் பேசிய நடிகை மமிதா பைஜூ:

மமிதா பைஜூ சமீபத்தில் பேட்டியில் கூறியதாவது, இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. எத்தனையோ பேரின் கனவுகளும், கடின உழைப்பும் இதில் அடங்கியுள்ளன; அவை வீணாகிவிடக் கூடாது. ஆரம்பத்தில், என்னால் இதை நம்பவே முடியவில்லை. சமூக ஊடகங்களில் வரும் அனைத்தும் உண்மையாக இருக்காது அல்லவா? அதனால், அடடா… அப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது, என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எதார்த்தம் உறைத்தபோது அது உண்மையில் கசிந்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது… என் சகோதரர்தான் முதன்முதலில் எனக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தார். அப்போது நான், ஏன் இப்படி…? என்றுதான் கேட்டேன். மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read… கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜூவின் பேச்சு:

#MamithaBaiju About #Jananayagan Leak:

• It’s very disappointing… very painful. A lot of people’s dreams and hard work.. it shouldn’t go to waste.

• At first, I didn’t believe it.. Not everything on social media can be true. I was like “Aiii… apdi lam iruka kudadhu…” But… pic.twitter.com/23EqXsLgpE

— Laxmi Kanth (@iammoviebuff007)

Also Read… பெல்ஜியத்தில் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித் குமார் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.