பொதுவாகவே கோடைக்காலத்தில் நமது உடல்நிலை சீராக வைத்துக்கொள்ள மருத்துவர்கள் சாப்பிட சொல்வது தர்பூசணி பழத்தைத்தான் .இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளது
தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்
1.தர்பூசணியில் தோராயமாக 92% தண்ணீர் தான் உள்ளது. . இந்த பழம் கடும் வெயிலால் நம் உடல் களைப்படைவதிலிருந்து விடுதலை அளிக்கிறது
2.தர்பூசணியில் கலோரிகள் குறைவாகவும், தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
3.தர்பூசணி வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும், இது நோயெதிர்ப்பு சக்தி கொடுக்கிறது மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
4.ஆரோக்கியமான தோல் மற்றும் கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ-யும் இதில் உள்ளது.
5.தர்பூசணி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
6.இது புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
7.இந்த தர்பூசணி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
8.தர்பூசணி செரிமான சக்தியை கொடுக்கிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
9.இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் கொண்டுள்ளது,
10.மேலும் இந்த தர்பூசணி நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.