நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி முதல்முறையாக 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.. தமிழகத்தில் மொத்தம் 233 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அடிப்படையில் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களும், பெண்களும் தவெகவை ஆதரிப்பார்கள் என கருதப்படுகிறது..
இன்று காலை ஏழு மணிக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து முதல் நாளாக நடிகர் அஜித் திருவான்மியூரில் வாக்களித்தார். இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காலை 8.10 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்கு பதிவு செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.
விஜய் வருவார் என்பதை தெரிந்து கொண்டு நீலாங்கரை பூத்தில் ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் கூடியிருந்தனர். எனவே விஜய் காரிலிருந்து விஜய் இறங்கியவுடன் அவரின் பவுன்சர்களும், காவல்துறை அதிகாரிகளும் அவரை பத்திரமாக வாக்கு பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.. கடந்த தேர்தலில் நடிகராக சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய், தற்போது அரசியலுக்கு வந்தபின் முதன்முறையாக வாக்களித்திருக்கிறார். விஜய் வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Video Courtesy to Polimer News
View this post on Instagram
A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)