“யாருதுப்பா இந்த ஃபோன்?” – கூட்டத்தில் குனிந்து செல்போனை எடுத்துக்கொடுத்த விஜய்.. நீலாங்கரையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!
SeithiSolai Tamil April 23, 2026 01:48 PM

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்ய வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அங்கிருந்த கூட்ட நெரிசலில் கீழே விழுந்த செல்போன் ஒன்றைத் தானே முன்வந்து எடுத்துக்கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாக்குச்சாவடிக்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்யைப் பார்க்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது; அப்போது கூட்டத்தில் ஒருவரின் செல்போன் தவறி கீழே விழுந்தது. அதைக் கவனித்த விஜய், சற்றும் யோசிக்காமல் உடனடியாகக் குனிந்து அந்த ஃபோனை எடுத்து, “ஹலோ.. யாருதுப்பா இந்த ஃபோன்?” எனக் கேட்டார்.

பதற்றத்துடன் ஓடிவந்த ஒரு இளைஞர், “அண்ணே அண்ணே என்னோடது தான்னே” என்று கூற, புன்னகையுடன் அவரிடம் செல்போனை ஒப்படைத்தார் விஜய். ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தும், எளிய மனிதராக விஜய் நடந்துகொண்ட இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

“>

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.