தமிழ் நாட்டில் இன்று மிகவும் முக்கியமான நாளாக அனைவருக்கும் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் நாள் தான் இன்று. ஆம் இன்று தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது. கடந்த தேர்தலில் திராவிட முன்றேற்ற கழகம் வெற்றிப்பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். இந்த முறை யார் ஆட்சியை அமைப்பார்கள் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். கடந்த முறை தேர்தல் போல இந்த முறை இல்லாமல் அதிக அளவில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு சான்று கடந்த தேர்தலில் முதல் இரண்டு மணி நேரத்தில் பதிவான வாக்கு சதவீதத்தை விட இந்த 2026-ம் ஆண்டு தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது.
சாதாரண மக்கள் தங்களது ஜன நாயகக் கடமையை ஆற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது போல பிரபலங்களும் தங்களது ஜன நாயகக் கடமையை ஆற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் உச்ச நடிகர்கள் முதல் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆளாகா சென்று வாக்கு செலுத்திய நடிகர் அஜித்:Ajith sir cast his vote.
| #AK #Ajith #Ajithkumar | #AK64 | pic.twitter.com/jZv1GUHHVe
— Ajith (@ajithFC)
நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கிற்காக நாடு நாடாக சென்று போட்டியில் கலந்துகொள்வதில் பிசியாக இருந்தாலும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக நேற்று சென்னையை வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று காலையில் முதலாவது ஆளாக ஃபுல் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில் மாஸாக வந்து தனது வாக்கை செலுத்தினார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
காலையிலேயே வாக்கு செலுத்த சென்ற விஜய்:சென்னை, நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். pic.twitter.com/9PrznnqtNz
— TVK Vijay (@TVKVijayHQ)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய் இந்த 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்த்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். இவரது அரசியல் வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருத்து நிலவி வரும் நிலையில் இன்று காலையிலேயே தனது வாக்கினை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஜன நாயகக் கடமையை ஆற்றினார் ரஜினிகாந்த்:Superstar #Rajinikanth cast his vote..⭐ Many people were recording from very close and even saw who he voted for..🚶pic.twitter.com/vY4bFIWFPX
— Laxmi Kanth (@iammoviebuff007)
தமிழ் சினிமாவில் 75 வயதைக் கடந்தும் பிசியான நடிகராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போது தொடர்ந்து காலையிலேயே வந்து வாக்கை செலுத்திவிடுவார். அந்த வகையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தலிலும் காலையிலேயே தனது வாக்கை செலுத்திவிட்டார்.
Also Read… வாக்குப்பதிவு செய்த ரஜினிகாந்த்.. வாக்களிப்பதற்கு முன்னதாக சொன்ன முக்கிய அட்வைஸ்!
மூத்த மகளுடன் வந்து வாக்கு செலுத்திய கமல் ஹாசன்:Actors @ikamalhaasan and @shrutihaasan have voted.. #2026TNELECTIONS pic.twitter.com/0FAYawMz1R
— Ramesh Bala (@rameshlaus)
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் இன்று தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் உடன் சென்று தனது ஜன நாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
மனைவியுடன் வந்து ஜன நாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் சிவகார்த்திகேயன்:Actor @Siva_Kartikeyan and his wife are on the way to vote..#2026TNELECTIONS pic.twitter.com/07wUAWcJuY
— Ramesh Bala (@rameshlaus)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சேயோன் படத்தில் நடித்து வரும் நிலையில் இன்று காலையிலேயே சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது மனைவியுடன் வந்து வாக்கை செலுத்தினார்.
Also Read… Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!