குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்
TV9 Tamil News April 23, 2026 03:48 PM

தமிழ் நாடு முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி காலை 7 மணி முதல் தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்கு பதிவுகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த வாக்குப் பதிவில் பொது மக்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காலையிலேயே நடிகர்கள் அஜித் குமார், விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவகுமார் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண் விஜய், த்ரிஷா கிருஷ்ணன், பிரசன்னா, சினேகா, ஜெய், பிரபு தேவா மற்றும் இயக்குநர்கள் அட்லி, பா.ரஞ்சித் மற்றும் அமீர் என பலர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். தொடர்ந்து வாக்கு அளிப்பதன் முக்கியதுவம் குறித்தும் அவர்கள் மக்கள் நிச்சயமாக தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டும் என்று பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் பிரபலங்கள் தொடர்ந்து வாக்குகளை செலுத்தியது மட்டும் இன்றி தொடர்ந்து பேட்டிகளையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார் வாக்கு செழுத்திய பிறகு தமிழகத்தில் எப்படியான ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

யார் ஆட்சி அமைத்தாலும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும்:

அதன்படி நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களின் பேட்டியளித்த போது பேசியதாவது, இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 2026-ம் ஆண்டில் யார் ஆட்சியை அமைத்தாலும் அவர்கள் தமிழகத்தில் டாஸ்மாக்கை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் மாநில இளைஞர்களின் உயிர்களுக்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பெல்ஜியத்தில் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித் குமார் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகுமாரின் பேச்சு:

#WATCH | Tamil Nadu Elections 2026 | Veteran Actor Sivakumar casts his vote at a polling station in Chennai.

Veteran actor Sivakumar says, “Whichever party forms the government must prioritise the abolition of Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC). No… pic.twitter.com/ss2eqyNVNt

— ANI (@ANI)

Also Read… கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோஸ்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.