நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் தேர்தலை புறக்கணித்த மக்கள்
Top Tamil News April 23, 2026 05:48 PM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வாக்களிக்க வரவில்லை.


நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வாக்களிக்க வரவில்லை. இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்துள்ளனர். பெரும்பத்து வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 969 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சொடி காணப்படுகிறது. ஒரு மணி ஆன நிலையில், பெரும்பத்து வாக்குச்சாவடி மையத்தி 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.