ஒன்றா, இரண்டா, ஐந்தா.. எத்தனை விரல்களை காட்ட? - செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கலகல !
"ஒற்றை விரலை காண்பிக்கவா? இரட்டை விரலை காண்பிக்கவா? இல்லை ஐந்து விரல்களை காண்பிக்கவா ?" - வாக்குப்பதிவிற்கு பிறகு வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கலகலப்பேச்சு.
குடும்பத்துடன் வந்து வாக்கு செழுத்திய மு.க.அழகிரி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தனது குடும்பத்தினரோடு வசிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, தனது துணை வியாரோடு வருகை தந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்காளர் விபரங்களை சரிபார்த்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்கு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து தான் பதிவு செய்தது குறித்த புகைப்படம் எடுப்பதற்காக செய்தியாளர்கள் கூறியபோது...," ஒரு விரலை காட்டவா? இல்லை இரண்டு விரலை காட்டவா? இல்லை ஐந்து விரலை காட்டவா என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.
சூசகமாக பதில் சொன்னார்
அதனைத் தொடர்ந்து தனது துணைவியார் வாக்கு செலுத்திய பிறகு இருவரும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நிலையில் வெளியே வந்த போது தேர்தல் களம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மிகவும் சூடாக இருக்கிறது, என சூசகமாக பதில் சொன்னார். நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். என்று தெரிவித்து பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு.