ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!
Top Tamil News April 23, 2026 03:48 PM

கோவை அன்னூர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து- பிள்ளைப்பம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்து குடோனில் சோதனை செய்தனர்.

அங்கு விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5102 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த காளிமுத்து (48), வீரமணி (35), குமார் (44) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அன்னூர் அடுத்துள்ள காரனூர் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த சரவணக்குமார் (39) கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.