TN Assembly Elections 2026: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்!|TN Polling Live Updates
Vikatan April 23, 2026 12:48 PM
ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவர்களின் குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மகள், ஷ்ருதி ஹாசனுடன் வந்து வாக்கு செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன்.

கமல் ஹாசன் - ஷ்ருதி ஹாசன் வாக்கு செலுத்திய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் வந்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்கு செலுத்தினார். வாக்கு செலுத்துவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்திதவர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வாக்கு செலுத்தினார் தவெக தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளருமான விஜய், சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியிலுள்ள வாக்கு செலுத்தினார்.

தவெக தலைவர் விஜய்

திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள 61வது வாக்குச்சாவடியில் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது கட்டுப்பாட்டு கருவி பழுதான நிலையில் அந்த கருவியை மாற்றப்பட்டு தற்பொழுது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது அமைச்சர் கே என் நேரு 45 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்

கே. என். நேரு

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் தனது குடும்பத்தினருடன் வாக்கு பதிவு செய்தார்.

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் குடும்பத்தோடு வந்து வாக்களித்த எடப்பாடி.கே. பழனிசாமி!

எடப்பாடி, சிலுவம்பாளையும் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்தினார் அதிமுக பொதுச் செயலாளரும், எடப்பாடி தொகுதி வேட்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

எடப்பாடி.கே. பழனிசாமி! வாக்குப்பதிவு நிறுத்தம்!

ஈரோடு சம்பத் நகரில் வாக்குச்சாவடியில் இயந்திரம் செயல்படவில்லை வாக்குப்பதிவு நிறுத்தம்

ஈரோடு சம்பத் நகர் வாக்குச்சாவடி காத்திருக்கும் கே.என். நேரு

திருச்சி தில்லைநகர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை என்பதால் அமைச்சர் கே என் நேரு நீண்ட நேரமாக காத்திருக்கிறார்.

முதல் நபாராக வந்து வாக்களித்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறை, காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகமெங்கும் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து வாக்கு செலுத்தினார் சீமான்.

சீமான்

தஞ்சாவூரில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களிக்கும் வாக்காளர்கள்.

வாக்களித்த நடிகர் அஜித்!

ரேஸிங் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அஜித், சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தார். இன்று காலை முதல் ஆளாக திருவான்மியூரிலுள்ள அவருடைய வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார் அஜித்.

வாக்களித்த நடிகர் அஜித் தொடங்கியது வாக்குப்பதிவு!

தமிழகமெங்கும் இருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியது.

2026 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக இதுவரை தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியது கிடையாது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

அந்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, அதிமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளும் களம் காண்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணும் முதல் தேர்தல் இது. இவருடைய வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் பலமாக இருக்கிறது.

சீமான்

தமிழகத்தில் மொத்தம் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்கு செலுத்தி அவரவர் ஜனநாயகக் கடமையை ஆற்ற, அவர்களின் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். நாளை காலை வாக்குப்பதிவு தொடங்கவிருக்கும் நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரிகளின் பாதுகாப்புடன் தமிழகமெங்கும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இப்படி நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவிற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாக்குப்பதிவு தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.