தவெக 41 % ஓட்டு வாங்கும்!.. 120 இடங்களில் வெற்றி!.. ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி எடுத்த சர்வே!...
WEBDUNIA TAMIL May 02, 2026 12:48 PM


2026ம் வருடத்திற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 83.15 செய்த வாக்குகள் பதிவாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு SIR ஒரு காரணம் என பலரும் சொன்னாலும் நிறைய இளைஞர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்திருப்பதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவர் வெளியே வந்தாலே அவரை பார்ப்பதற்கு பல ஆயிரம் மக்கள் கூடி விடுகிறார்கள். அவர் பிரச்சாரத்திற்கு வந்தால் அவர் வரும் வழியெங்கும் இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் அவரை பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்..

ஒருபக்கம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஓட்டுகள் விசில் சின்னத்திற்கு விழுந்திருக்கிறது. அதற்கு காரணம் வீட்டில் உள்ள குழந்தைகள் பெரியவர்களிடம் விசில் சின்னத்திற்குதான் வாக்களிக்க வேண்டும் என அன்பாக கட்டளையிட்டதை பலரும் ஏற்றுக்கொண்டு ஒரு மாற்றத்திற்காக இந்த முறை விசிலுக்கு வாக்களித்துள்ளனர்.

எனவே விஜய் அதிகமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
. ஆனால் சமீபத்தில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என பல அமைப்புகள் சொன்னது. இரண்டு அமைப்புகள் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் ஒரே ஒரு கருத்துக்கணிப்பு தவெக ஆட்சி அமைக்கும் என சொன்னது.

இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி எடுத்துள்ள கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அவர் வெளியிட்ட வீடியோவில் தமிழ்நாட்டில் 4.88 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் 234 தொகுதியிலும் சேர்த்து வெறும் 60 ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுத்த கருத்துக்கணிப்புகளைத்தான் இதற்கு முன்பு நீங்கள் பார்த்தீர்கள்.

ஆனால் நாங்கள் ஒரு தொகுதிக்கு 10 பேர் என்கிற கணக்கில் 2340 முன்னாள் காவல்துறை அதிகாரிகளை வைத்து பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை எடுத்தோம். ஒவ்வொரு அதிகாரியும் 100 பேரிடம் பேசினார்கள். அதில் 41 சதவீதம் பேர் விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தவெக 41 சதவீத வாக்குகளை பெற்று 120 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.

குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் விசில் சின்னத்திற்கு வாக்குகள் விழுந்திருக்கிறது. பல வருடங்களாக அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்த பலரும் கூட தங்கள் வீட்டு பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் சொன்னதை கேட்டு விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.