தங்கம் விலை உயர்வு, நயினாருக்கு செங்கோட்டையன் பதிலடி, கேரளா வேலை நிறுத்தம், ட்ரம்ப் விளக்கம் - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் May 02, 2026 02:14 PM
-
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; பலத்த எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்.
-
தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார் - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
- "இது தான் அவருக்கு இறுதி தேர்தல்" - TVK எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று விமர்சித்த நைனார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி.
-
தவெக தலைவர் விஜய்யின் வேளாங்கண்ணியின் சுற்றுப்பயணம் திடீர் ரத்து.
-
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கத்திற்குத் தயார் எனவும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 1,12,000 ரூபாய்க்கும் விற்பனை.
- சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் உணவக உரிமையாளர்கள் வேலை நிறுத்தம். வரும் 6-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிப்பு.
- நாடு முழுவதும் நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டில் 30 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைப்பு.
- இன்று உங்களின் செல்போனிற்கு அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் அது குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல். நாடு முழுவதும் பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் Cell Broadcast சேவை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது.
- மத்திய பிரதேசத்தில் சுற்றுலாப் படகு அணையில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர். விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் வீடியோ வெயிாகி அதிர்ச்சி.
- நிரந்தர போர் நிறுத்தத்திற்கான ஈரானின் முன் மொழிவுகளில் திருப்தி இல்லை என ட்ரம்ப் விளக்கம். ஈரான் பிரச்னையில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டம்.