சென்னை வடபழனியில் தனியார் அமைப்பின் விருது விழா தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகர்களான ராதா ரவி, அம்பிகா, ஜெகன், இயக்குநர் விக்ரமன், இசையாமைப்பாளர், பாடகர் ஆண்டணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், தனது அரசியல் போராட்டங்கள் குறித்து கூறியதோடு, விஜய்யின் கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் இருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அப்போதைய விஜயின் விஜய்யின் மேலாளர் எனக்கு காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் என்னை சந்தித்து ஒரு பெரும் தொகை கொடுப்பதாக கூறியதை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனங்கள் வாங்கி தருவதாக கூறியதாகவும், இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காத அரசியல்வாதியாக என்னை நிலைநிறுத்தி கொண்டேன் என்று நிகழ்வில் பேசியுள்ளார்.
அதை தொடர்ந்து பேசிய நடிகர் ராதாரவி, வேல்முருகன் மனதில் பட்டதை பேசுபவர், அதனால், அவர் நிறைய பட்டிருக்கிறார். நானும் நடிகை அம்பிகாவும் அந்த காலத்தில் நடித்த பேய்வீடு, நாகம் போன்ற படங்கள் நன்றாக ஓடியது. என்னுடன் அந்த காலத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே நடிகை அம்பிகா தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சினிமாவில் இருந்த ஒருவர் இன்று பெரிய இயக்கங்களுக்கு போட்டியாக இருக்கிறார். கூட்டம் சேர்வது பெரிதா, அந்த கூட்டம் அர்த்தமுடன் சேர வேண்டும் என்பது தான் முக்கியம் என்று விஜய் குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.