தர்பூசணி காரணமல்ல!.. 3 பேர் இறந்த சம்பவத்தில் திருப்பம்..
Webdunia Tamil May 02, 2026 05:48 PM


சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டது.
மும்பையில் வசிக்கும் அப்துல்லா தனது உறவினர்ள் 5 பேரை விருந்துக்காக வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

விருந்து முடிந்து உறவினர்கள் சென்றபின் அப்துல்லாவும் அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் தர்ப்பூசணி சாப்பிட்டுள்ளனர். சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு போன்ற சில பிரச்சனைகள் ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்தனர்..

இதையடுத்து தர்பூசணி சாப்பிட்டதால்தான் அவர்கள் இறந்து போனார்கள் என செய்தி காட்டுத்தீவியாக பரவியது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உடல் கூறாய்வில் அவர்களின் உடலில் மார்பின் என்கிற வலி நிவாரணி மருந்து அதிக அளவில் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதனால், உயிரிழந்தவர்களின் மூளை உள்ளிட்ட பாகங்கள் பச்சை நிறமாக மாறி இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தர்பூசணிக்கும் உயிர் இழப்பும் தொடர்பில்லை என மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்திருக்கிறது..

மார்பின் மாத்திரையை அதிக அளவு எடுத்துக் உட்கொண்டதால்தான் அவர்களின் மரணம் அடைந்தார்கள் என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.