“ஐபிஎல் ஒரு பிசினஸ் தான்!”.. பிட்ச் ரகசியத்தை போட்டுடைத்த முரளிதரன்.. ஷாக்கான கிரிக்கெட் உலகம்..!
SeithiSolai Tamil May 02, 2026 05:48 PM

மும்பை மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில், ரையான் ரிக்கெல்டனின் அதிரடி சதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த இமாலய இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் ஐதராபாத் அணியின் வெற்றியை எளிதாக்கியது.

சமீபகாலமாக ஐ.பி.எல் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பதும், அதைச் சுலபமாகத் துரத்திப் பிடிப்பதும் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இது குறித்து ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் முரளிதரன் கூறுகையில், ஐ.பி.எல் என்பது தற்போது கிரிக்கெட் வளர்ச்சியைத் தாண்டி ஒரு பெரிய வணிகமாகவும், ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் அதிகமாகப் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களைப் பார்க்கவே விரும்புகிறார்கள் என்பதால், அவர்களுக்குப் பிடிக்கும் வகையிலேயே ஆடுகளங்கள் ரன்கள் குவிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அமைத்தால் ரசிகர்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்பதால், விளம்பரதாரர்கள் மற்றும் பார்வையாளர்களின் விருப்பத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.