உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக கூகுள் (Google) நிறுவனத்தின் யூடியூப் (YouTube) உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இதில் புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், உலக அளவில் உள்ள பயனர்களுக்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்தும் பிக்சர் இன் பிக்சர் (Picture In Picture) அம்சத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், யூடியூபில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் வீடியோ தளமாக யூடியூப் உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும்போது, அதனை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருவேளை அந்த செயலியில் இருந்து வெளியே வந்துவிட்டால், அதனை பயன்படுத்த முடியாது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப், இந்த பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஆனால், முன்னதாக இந்த அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த பயனர் பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த நிலையில் தான் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக பிக்சர் இன் பிக்சர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?
பிக்சர் இன் பிக்சர் அம்சம் எப்படி செயல்படும்?இந்த அம்சம் மூலம் யூடியூப் செயலியை பயன்படுத்திக்கொண்டே வேறு ஒரு செயலியையும் பயன்படுத்த முடியும். அதாவது, யூடியூப் செயலியில் இருந்து வெளியே வந்தாலும், சிறிய கட்டத்தில் யூடியூப் ஓடிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போது யூடியூப் ஒரு இடத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனை ஸ்கிரீனின் எந்த மூளையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ
யூடியூப் டுடோரியல் வீடியோ பார்த்துக்கொண்டே ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.