சமூக வலைதள உலகில் ஒரு சில பதிவுகளிலேயே கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்ப்பது என்பது அசாத்தியமான காரியம். ஆனால், எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு இளம் படைப்பாளி, தனது வித்தியாசமான கற்பனைத் திறனால் ஒட்டுமொத்த இணைய உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த காலு புடிக் என்ற இளைஞன், பழைய ஷூக்கள் மற்றும் காலணிகளைத் தயாரிக்கும் பொருட்களைக் கொண்டு நுணுக்கமான ஆடை வடிவமைப்புகளைச் செய்து வருகிறார். மற்றவர்கள் குப்பையாகக் கருதும் பொருட்களைக் கொண்டு அவர் உருவாக்கும் நவநாகரீக ஆடைகள், தற்கால ஃபேஷன் உலகிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 21 பதிவுகளை (Posts) மட்டுமே இட்டுள்ள இவரை, குறுகிய காலத்திலேயே சுமார் 2.8 மில்லியன் (28 லட்சம்) பேர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். இவர் பதிவிடும் ஒவ்வொரு ‘ரீல்ஸ்’ வீடியோக்களும் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகின்றன.
இவரது திறமையைக் கண்டு வியந்த உலகின் முன்னணி பிராண்டுகள் பலவும் இவரைத் தொடர்பு கொண்டுள்ளன. வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், உலகளாவிய சமூக வலைதள நிறுவனமான இன்ஸ்டாகிராம் (Instagram) தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இவரைப் பற்றிச் சிறப்பிக்க விரும்பித் தொடர்பு கொண்டும், அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
View this post on Instagram
A post shared by Kalu Putik (@kaluputics)
மேலும் “யார் இந்த இளைஞன்?” என்று தேடும் அளவிற்குத் தனது தனித்துவமான திறமையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் காலு புடிக். எந்தவொரு பகட்டும் இன்றி, தன்னிடம் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு அவர் காட்டும் இந்த ‘ஃபேஷன் புரட்சி’ இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.