வைகோ, திருமாவளவன், பிரேமலதா என தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸிட் போல் ரிசல்ட்டுக்குப் பிறகு தங்கள் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவாலயத்திலும் ஆனந்த அலை இல்லை என்கின்றனர்.
திமுகவுக்கு ஆதரவான நிர்வாகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை தாண்டி ஆக்சிஸ் மை இந்தியா ஆப்பு வைத்த நிலையில், விஜய்யின் எழுச்சி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்துக்கு அது கடும் அப்செட்டை கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர்.
ரஜினிகாந்த் தைரியமாக அரசியலுக்கு அறிவித்ததை போல வந்திருந்தால் கூட திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் விஜய்க்கு கொடுத்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் எல்லாம் விஜய் அளவுக்கு பொறுமையாகவும் வலிமையாகவும் கையாண்டு இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க விஜய் ஒருவேளை சிஎம் ஆகிவிட்டால், அதை எல்லாம் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோம் என ரஜினிகாந்த் இப்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர். எப்படி இருந்தாலும் மே 4ம் தேதி வரும் உண்மையான ரிசல்ட்டை பார்க்க பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.
விஜய்க்கு எதிராக செயல்பட்ட பலரும் ஒரு வித பயத்திலேயே தற்போது தங்களது பேச்சுக்களை மாற்றி பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் தோற்றாலும், ஜெயித்தாலும் விஜய்யின் கட்ஸ் இந்தியளவில் பாராட்டப்பட்டு வருவதும் சூப்பர் ஸ்டாரை பாதித்திருக்கும் என்கின்றனர்.