திருவனந்தபுரம், மே 02 : கேரளம் (Keralam) மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்தவர் முகமது என்ற 23 வயது நபர். இவருக்கு திருமணமாகி 21 வயதில் பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது அவர்களுக்கு 4 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், பாத்திமா மீது சந்தேகத்தில் இருந்து வந்த முகமது கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனைவி மீது சந்தேகம் – கணவன் செய்த கொடூரம்பாத்திமா மீது சந்தேகத்தில் இருந்த முகமது அவர் யாருடன் பேசினாலும், ஆண் நண்பர் உடன் தான் பேசுகிறார் என நினைத்து சண்டை போட்டுள்ளார். இவ்வாறு பாத்திமாவை கொடுமை செய்து வந்த முகமது, அவரை தனது உறவினர்களிடம் கூட பேச விடாமல் சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என நினைத்து, பாத்திமா தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : என்ன பார்த்தா சிரிக்கிற.. கடை உரிமையாளர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்.. ஷாக் சம்பவம்!
துப்பட்டாவல் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவர்இந்த நிலையில், சம்பவத்தன்று தூங்கிக்கொண்டு இருந்த பாத்திமாவை எழுப்பி அவரது கணவர் கடற்கரைக்கு செல்லலாம் என கூறியுள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத அவர், குழந்தையை தூக்கிக்கொண்டு கணவருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகவது, பாத்திமா அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க :அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும்.. பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா!
மனைவியை கொலை செய்த முகமது சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், அதிகாலையில் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெண்ணின் சடலத்தை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாத்திமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முகமதை கைது செய்துள்ளனர்.