சென்னை, மே 4, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது இடத்தில் அதிமுக 52 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அரசியல் மற்றும் பல துறைகளின் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய்க்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை:I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!…
— K.Annamalai (@annamalai_k)
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். என் மண்ணில் மக்கள் ஒரே குரலில் எழுந்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பணம் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு இல்லை என்றும், குடும்ப அரசியலுக்கு இல்லை என்றும் மக்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், அரசியல் தலைமுறை மாற்றத்திற்கு ஆம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை சாதித்தவர் யாராக இருந்தாலும், அனைவருக்கும் ஒரு பெரிய நன்மை செய்திருக்கிறார். தமிழக அரசியலில் சிறப்பான அறிமுகத்தை பதிவு செய்த தமிழக வெற்றிக்கழகம் மற்றும் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். நீங்கள் நினைத்ததை சாதிக்க இறைவன் துணை நிற்கட்டும்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் — இது தரையில் கடுமையாக நடைபெற்ற ஒரு போராட்டம். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த முறை வெற்றி பெறாதவர்களும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக அனுதாபங்கள்.
இறுதியாகவும் மிக முக்கியமாகவும், என் அன்பான பாஜக தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தரையில் கடுமையாக உழைத்துள்ளீர்கள். நல்ல காலம் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.