தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் திமுக ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
குறிப்பாக ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உற்றுநோக்க வைக்கும் அதிர்ச்சித் தகவல் கொளத்தூர் தொகுதியிலிருந்து வெளியாகியுள்ளது.
திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அவர் தொடர்ந்து பின்னடைவையே (33641) சந்தித்து வருகிறார்.
அங்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் 41616 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருவது மிகப்பெரிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவின் தலைவர், முதல்வர் ஸ்டாலின் இப்படி பின்னடைவைச் சந்திப்பது திமுக தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் போல் 90% திமுக அமைச்சர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.