#BREAKING ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்
Top Tamil News May 06, 2026 07:48 PM

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்  மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து விஜய் நாளை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கிறார்.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு சென்னை மக்கள் பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தவெக தலைவர் விஜய் கோரியிருக்கிறார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ரமணன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.  ஆளுநரின் அழைப்புக்காக விஜய் தரப்பு காத்திருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.