தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி பெரிய அளவில் சாதித்து காட்டியது எம்ஜிஆர் மட்டுமே. அவர் மட்டுமே மூன்றுமுறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பின் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் வரை சென்றார். அவ்வளவுதான்.. இதற்கிடையில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் உள்ளிட்ட பலரும் அரசியல் கட்சி தொடங்கினார்கள்.
ஆனால் யாருக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டு அதன் பின் வாங்கினார். ஆனால் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி துவங்கி ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று நாளை காலை தமிழகத்தின் முதல்வராகவும் அவர் பதவியேற்கவுள்ளார். கட்சி துவங்கி இரண்டு வருடங்களில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டுயிட்டு ஆட்சியைப் பிடிப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை..
முருகதாஸ் மற்றும் ஷங்கர் படத்தில் வருவது போல விஜய்க்கு எல்லாமே வேகமாக நடந்து முடிந்து விட்டது. அதோடு ஒவ்வொரு மேடையிலும் ‘திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.. நல்லதே நடக்கும்.. நம்பிக்கையோடு இருங்கள்.. வெற்றி நிச்சயம்’ என தொடர்ந்து நம்பிக்கையோடு பேசி வந்த ஜய் தற்போது அதை நிரூபித்தும் காட்டிவிட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விஜய்க்கு வாக்களித்து விட்டனர்..
இதில், விஜய்தான் முதல்வர் என சரியாக கணித்து ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண் ராஜ் என சொல்லலாம்.
திமுகவை விமர்சனம் செய்ததால் விசிகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆதவ் அர்ஜுனா. மன்னிப்பு கடிதம் கொடுத்திருந்தால் அவரை மீண்டும் விசிகவில் சேர்த்திருப்பார் திருமாவளவன். அல்லது அதிமுகவில் கூட அவர் இணைய வாய்ப்பிருந்தது. ஆனால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டு தவெகவில் இணைந்தார்...
செங்கோட்டையனுக்கு அதிமுகவில் கடும் நெருக்கடி ஏற்பட் பின்னரும் சமரசம் செய்யப்பட்டு நீண்ட காத்திருப்புகளுக்கு பிறகு அதிமுகவிலேயே தொடரும் வாய்ப்பிருந்தது. அதிமுக வேண்டாமெனில் திமுக அல்லது பாஜகவில் இணையும் வாய்ப்பிருந்த போதும் அவர் விஜய்தான் எதிர்காலம் என நம்பி தவெகவுக்கு சென்றார்.
தவெக முக்கிய நிர்வாகி அருண் ராஜுக்கு முக்கிய பொறுப்புகளில் நீண்டகாலம் பணியாற்றவுன்ம், அதிகாரமிக்க வாய்ப்புகள் இருந்தும் அதையெல்லாம் தாண்டி தவெகவில் இணைந்தார். இந்த மூவருமே தற்போது எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சராகவும் மாறவிருக்கிறார்கள்.