தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு இந்தப் படத்தினை ரிலீஸ் செய்ய உள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ள நிலையில் படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 ஆகியப் படங்களில் பிசியாக நடித்து வந்தார் நடிகர் சூர்யா. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா 47 படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது சூர்யா 47 படக்குழு:அதன்படி இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள சூர்யா 47 படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:#Suriya’s 47th film’s climax shoot has been wrapped 🎬
– The film is expected to release either by the end of this year or during Pongal 2027 🧨#Suriya47 #Karuppu pic.twitter.com/xIxtcfPBZz
— Movie Tamil (@_MovieTamil)
Also Read… அஜித் குமாரின் 64 படம் நடைபெறுமா? வைரலாகும் பதிவு