சென்னை, மே 6 : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தனது சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்பூரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆர்.பி.சௌத்ரியின் மகன்கள் தான் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தென்னிந்திய சினிமாவில் 98 படங்களை தயாரித்துள்ள அவர், இதுவரை அதிக அளவில் புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகரும் தவெக தலைவருமான விஜய், ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் வென்று, மே 7, 2026 முதல்வராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மயிலாப்பூரில் உள்ள ஆர்.பி.சௌத்ரியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞச்லி செலுத்தினார். பின்னர். ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க : மே மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு விஜய் அஞ்சலி#WATCH | Chennai, Tamil Nadu: TVK chief and actor Vijay arrives at the residence of veteran film producer R.B. Choudary to pay him his last respects.
R.B. Choudary died in a road accident in Beawar, Rajasthan, yesterday. pic.twitter.com/TbbOf4Z7k3
— ANI (@ANI)
தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 98 படங்கள் வரை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. இவரது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஏராளமான புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, பேரரசு, ராஜகுமாரன், சசி, என பல தமிழ் சினிமாவின் மிக இயக்குநர்களின் முதல் படத்தை தயாரித்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஆர்.பி.சௌத்ரி. இவரது மகன்களான ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் படங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் – தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்
விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரஷாந்த், பிரபு தேவா என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜய்க்கு பூவே உனக்கா, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.