தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கும் வேளையில், தவெக-வுக்கு (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவு தருவது தொடர்பாக விவாதிக்கவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்கழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா வேண்டாமா என்ற உச்சகட்ட க்ளைமாக்ஸ் முடிவை நோக்கி ஒட்டுமொத்த தமிழகமும் விசிகவின் இந்த கூட்டத்தைத்தான் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ஆனால், “இப்போதைக்கு சென்னைக்கு யாரும் வர வேண்டாம்!” என கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் போட்ட ஒற்றை அறிவிப்பு, விசிக தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியல் விமர்சகர்களையும் “ஏன்… என்னாச்சு?” என தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது.