நாம் வெளியே செல்லும்போது ஆதாரை எடுத்துச்செல்ல மறந்திருப்போம். ஆதார் எண்ணும் நினைவில் இருக்காத சூழல் உருவாகி இருக்கும். இந்த நிலையில், ஆதார் அட்டையைப் பெற, UIDAI இணையதளத்துக்குச் செல்லாமல், வாட்ஸப் மூலமாகவே பெறலாம். இந்தியக் குடிமகன்களுக்கு இதற்கான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, MyGov உதவி மைய சாட்பாட் மூலம், இந்த ஆதார் அட்டை பிடிஎஃப் கோப்பை நாம் வாட்ஸப்பிலேயே பெறலாம்.
வாட்ஸப்பிலேயே ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
இதை மறக்காதீங்க!
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை சரிபார்ப்புக்காக உங்கள் ஆதார் மற்றும் டிஜிலாக்கர் கணக்குடன் இணைக்க வேண்டும்.
இந்த வாட்ஸப் ஆவணம் பாதுகாப்பானது மற்றும் UIDAI-ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்த சேவை எல்லா நேரமும் கிடைக்கிறது. இதற்கு, UIDAI தளத்தைப் பார்வையிடவோ, அதன் போர்ட்டலைப் பயன்படுத்தவோ அல்லது சிக்கலான கேப்ட்ச்சாவை உள்ளிடவோ தேவையில்லை.