“விஜய் ஆட்சி அமைக்க கூடாது”.. அவருக்கு எதுக்கு சப்போர்ட் பண்ணணும்? தவெக-வுக்கு ஆதரவு தர முடியாது என ஓப்பனாக 'நோ' சொன்ன அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலாளர்..!!
SeithiSolai Tamil May 08, 2026 12:48 AM

தமிழகத்தில் 108 இடங்களைப் பிடித்து தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்க அதிமுக முட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தற்போது கொளுத்திப் போட்டுள்ள “வெடி” கருத்து அரசியல் களத்தில் பெரும் தீயை பற்றவைத்துள்ளது.

“விஜய்க்கு ஆதரவு தர நாங்கள் ஏன் இங்கே கூட வேண்டும்? ஒரு அரசை நடத்த சில தகுதிகள் வேண்டும், ஆனால் விஜய்க்கு அடிப்படைத் தகுதி கூட இல்லை!” எனத் தாறுமாறாக எகிறியுள்ளார் அன்பழகன். விஜய் வெறும் சினிமா நடிகர் மட்டும்தான் என்றும், அவருக்கு அதிமுக ஆதரவு அளிக்க ஒருபோதும் வாய்ப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாகப் பேசியிருப்பது, கூட்டணி கனவில் இருந்த தவெக தொண்டர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.