தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ள நிலையில், சொந்தக் கட்சியினரே அதற்கு முட்டுக்கட்டை போடுவது தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி மீது கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சியின் கொள்கைகளுக்கும் முடிவுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக இடைநீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், அதை விமர்சித்த நிர்வாகி பதவியில் இருந்து தூக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கூட்டணிக் குறித்து தேவையில்லாமல் பேசுபவர்களுக்குத் தலைமை ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.