16 ஆண்டுகளைக் கடந்தது ராகவா லாரன்சின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம்
TV9 Tamil News May 08, 2026 12:48 AM

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 07-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம். வெஸ்டர்ன் காமெடி பாணியில் உருவான இந்த இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தினை இயக்குநர் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா, நாசர், சாய் குமார், எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், மௌலி, இளவரசு, ரமேஷ் கண்ணா, வையாபுரி, டெல்லி கணேஷ், மனோரமா, சாம்ஸ், மோகன் ராமன், பெசன்ட் ரவி, வி.எஸ்.ராகவன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாஅக்வும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிப்பு நிறுவனமான AGS என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தைப் போலவே பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகளைக் கடந்தது இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம்:

தமிழ் பேசும் கௌ பாய்கள் வாழும் கிராமமாக உள்ளது ஜெயசங்கரபுரம். இந்த  நகரத்தையும், மற்ற கிராமங்களையும் தன் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும், கிழக்கு கட்டை’எனும் ஒற்றைக் கண் கொண்ட கொடுங்கோலன் ஒருவன் ஆண்டு வருகிறான். இப்படி ஒரு ஆட்சியின் கீழ் மக்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள் என்பதை மிகவும்  காமெடியாக காட்டியிருப்பார்கள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடும் விதமாக தங்களது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Also Read… தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்

இரும்புக் கோட்டை முரட்டி சிங்கம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

#16YearsOfIrumbukkottaiMurattuSingam 🔥#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi@offl_Lawrence @iamlakshmirai@chimbu_deven @gvprakash#agsentertainment pic.twitter.com/pPJNxBRNY2

— AGS Entertainment (@Ags_production)

Also Read… அதர்வாவின் பிறந்த நாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடும் இதயம் முரளி படக்குழு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.