தவெகவுக்கு மேலும் சிக்கல்? – அடுத்தடுத்து எம்எல்ஏகளை சந்திக்கும் திமுக, அதிமுக தலைவர்கள்
TV9 Tamil News May 08, 2026 12:48 AM

சென்னை, மே 7 : கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளில் வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதாக கூறி ஆளுநர் தவெகவிற்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து தவெக தரப்பில் பிற அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் திமுக மற்றும் அதிமுக தரப்பில் அக்கட்சிகளின் எம்எல்ஏகளின் கூட்டத்தை சந்தித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரெசாரட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏகளை சந்தித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அக்கட்சியினர் சிலர் தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தவெகவிற்கு ஆதரவு இல்லை என்று உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து இந்த சந்திப்பில் பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

#WATCH | Chennai, Tamil Nadu: Newly elected DMK MLAs arrive at DMK Headquarters Anna Arivalayam for a meeting

In the recently concluded elections, 59 DMK MLAs were elected. pic.twitter.com/JT8dsHUPaG

— ANI (@ANI)

மற்றொரு பக்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி எம்எல்ஏகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ்க்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஆராய்ந்து உடனடி முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க : தவெக விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

மேலும், திமுக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதே தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அவசியமானது . இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லை இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லை. தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மையான நோக்கம் என மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.